Wednesday, December 9, 2009
கற்பனை வறட்சி???
போரிட!
போர்க்களத்தில் நீ
சிந்திய உதிரத்துளிகளை
நன்னீராய் சேகரித்தது
போல...
சேகரித்த உன்
துளிகள்
பொங்கிப் பெருக்கெடுத்து
"வைகை"யாய்
எம் மண்ணின்
தாகம் தீர்க்க...
தாகம் தீர்ந்தவள்
தந்த
மணம் வீசும்
மல்லிகையை
சரமாய் தொடுத்தது
போல...
வார்த்தைகள் நூறாய்
அடுக்கடுக்காய் வந்து
குவிய...
சரமாய்த் தொடுத்தேன்
உன்னை!
கவிதை என்றார்கள்!
இன்று
போட்டிக்கு கவிதை
தேடினேன்!
வறட்சியானது
என் மனது!
நாளை ஆகப் போகும்
எம் மண்ணின்
நிலை போல...
"உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு"
நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
Tuesday, December 1, 2009
அழகி?
அழகுக்கு இலக்கணம்
வகுக்கின்ற உலகில்
இறைவனின்
மறு உருவமாய் பிறந்தவள்
நீ!
மலையும் அழகு!
அதில் வடிக்கும் சிலையும்
அழகு!
மலை மீது பரவும்
மேகமும் அழகு!
காடும் அழகு!
காட்டில் திரியும்
மான்களும் அழகு!
அருவியும் அழகு!
அது
பாய்ந்தோடும் நதியும்
அழகு!
இப்படி
அழகை வர்ணிக்கும்
உலகு
இறைவனின் கற்சிலையும்
நீயும்
ஒரே வண்ணம்
என்ற போதிலும்
உன் அழகை
ஏற்றுக்கொள்ளாத
காரணம்?
Friday, November 13, 2009
வாசம்
திரும்பிப் பார்க்கிறேன் !
பின்னால் வெகு தூர
ஒற்றை ரோஜாவாய்
நீ !
ஏனெனில்
உன் வாசம்
என் சுவாசம்
மட்டுமே அறியும் !

வெளிச்சமில்லா இருட்டு
பாதை!
வளைந்து நெளிந்து
செல்லும் இந்த
குறுகிய பாதை
எங்கும்
சிவப்பு சாயம்!
தேடுகிறேன் உன்னை
இந்த
பாதையின் வழியே!
தூரத்தில் வெளிச்சப்புள்ளியாய்
நீ!
பிடிக்க முயல்கிறேன்
முடியவில்லை!
ஓடுகிறாய் என்னைக்
கேலி செய்து!
நுழைந்து விட்டாய் அந்த
மாளிகைக்குள்!
நுழைய முயல்கிறேன்
நானும்!
கண் விழித்தேன்
கனவென்று!
ஆனால்
படபடக்கிறது என்
இதயம் மட்டும்!
ஆம்!
என் இதய மாளிகையில்
நீ
வசிக்கும் போது
நான் எப்படி நுழைவது?
Wednesday, October 7, 2009
Thursday, September 3, 2009
Tuesday, August 25, 2009
மழை???
பறை சாற்றியது உன்
வருகையை!
ஞாயிறும் தணிந்தான்
கோபத்தை!
நெற்றியில் விழுந்தாய்
ஒற்றை புள்ளியாய்!
அண்ணாந்து பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம்
குடைகளாய்
அடைத்திருந்தாய் எங்கள்
பள்ளி மைதானத்தை!
புள்ளியிட்டாய்
ஊர் முழுவதும்
கோலப் போட்டியில் இருக்கிறாயோ
என்பது போல்!
இதமாய் நனைந்தது
என் மனது!
கூக்குரலிட்டாய் திடீரென்று!
நீ
வரைந்த கோலத்தை
அழித்தாய் உன்
அழுகுரலால்!
யார் வீட்டில்
இழவு
வேண்டுமென்று அழுகிறாய்
என் வீட்டு
ஒற்றை சுவற்றையும்
இடித்து விட்டு.....
Saturday, August 8, 2009
நான் யார்?
நான்.....
ஞாயிறா?
திங்களா?
திங்களென்றால்
தாய்க்கு உணவூட்டவும்
காதலுக்கு துணையாகவும்
கவிஞனின் கற்பனைக்கு
வித்தாகவும்!
இல்லை!
நான் சூரியன்!
சுட்டெரிக்கும் வெப்பமும்
என்னால்!!
நிலவின் குளிர்ச்சியும்
என்னால்!
என் வெப்பமூச்சை
அறிந்த நீ
மறந்து விட்டாயே!
நிலவின் குளிர்ச்சியும்
என்னால் என்பதை?
பிம்பத்தை எழுதும்
கவிஞனின்
எழுதுகோலுக்கு மூலத்தை
தொட மனமில்லையே......?
தாய்
நான் வளர்த்தேன் என்
உயிரை!
பசி என்று நான்
அறியவில்லை
கொடுத்தாய் உன் குருதியை
எனக்கு உணவாய்!
நான் வெளிச்சம் பார்க்க
நீ
பெற்ற வலி?
எழுத்தாணி கொண்டு எழுத
வார்த்தை இல்லை!
உறவுக்கும் உணர்வுக்கும்
நீ
கொடுத்த இடம்
ஏற்படுத்தின சந்தேகம்
என்னுள்!
நீ அடிமையோ என்று!
என்னுள் உயிர் விதைத்த
உன் மீது
நான் வீசிய வார்த்தைகள்
ஏராளம்!
பார்க்கின்றோர் பார்வையில்
அது விஷம்!
ஆனால் அது உனக்கும்
எனக்குமான உயிர் பிணைப்பு !
உயிர் தந்தாய்!
உடல் தந்தாய்!
உலகம் காட்டினாய்!
இன்று
நீ படும் வேதனை பார்த்து
நான் செய்யும்
கைமாறு?
கேவலம் உன்
மருத்துவத்திற்கான பணமும்
என் கண்களில் திரளும்
கண்ணீரும்!!??
Monday, August 3, 2009
மனைவி
தெரியவில்லை!
பெண் பிறந்தால்
உனக்கு
என் அறியா வயதில்!
பிறந்தது
இந்த ராஜகுமாரி அல்லவா!
ஐந்து வயதில்
போட்டேனே மூன்று முடிச்சு
என் இதயத்தில்!
இருபத்திஎட்டில் போட்டது
சம்பிரதாயத்தில்!
வாட் சண்டை தான்
போடவில்லை
உன்னுடன் சிறுவயதில்!
ஆனால்
கண் சண்டை புரிந்தேனடி
பருவ வயதில்!
ஐந்து வயதில்
நான் கண்ட இந்த
நிலா
பருவப் பாதையில் என்னை
தவறின்றி
அழைத்து வந்த
வெளிச்ச சூரியன்!
உன் நட்பு வட்டத்தை
நான்
கபளீகரம் செய்தபோதும்
சிரித்து ரசித்த
தாய்
அல்லவா நீ!
காலுக்கு மெத்தை
எங்கள்
ஈழத்திலும் தான்!
வானமே குடையாய்!
அம்புலியே விளக்காய்!
பயணிக்கிறோம் எங்கள்
ராஜபாட்டையில்
கிழக்கு நோக்கி!
விடியலையும் நோக்கி தான்!
ஈழத்தில் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த கட்டத்தில் அவர்கள் ஒவ்வொரு இடமாக காலி செய்து சென்ற போது அவர்களுக்கு ஒரு விடியல் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் எழுதியது.
இன்று தம் தலைவனையும் இழந்து சொந்த நாட்டினிலே வீடட்றவனாய் முகாம்களில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நம் ஈழத்து உறவுகளின் விடியலை வேண்டி ..........
Saturday, August 1, 2009
தோழி

நினைத்துப் பார்க்கிறேன்
புரியவில்லை!
எப்படி வந்தது இந்த
நட்பு?
ஒன்றாய் படிக்கவும்
இல்லை!
ஒன்றாய் பழகவும்
இல்லை!
நட்பென்ற மலர்
நம்முள் மலர்ந்த
பின்
தானடி அறிந்தேன்
உன் முகத்தை!
எழுதத்தெரியாத
என்னை
எழுத வைத்தாய்!
வாசிக்காத என்னை
வாசிக்க வைத்த
தோழி நீ!
அகவையென்று பார்த்தால்
நீ எனக்கு
குழந்தையடி!
நட்பென்ற புரிதலின்
பின்
வயது எங்கே?
நீ எனக்கு
தோழியா?
தோழனா?
சகோதரியா?
குழந்தையா?
இல்லை!
அனைத்தும் கலந்த
கலவையடி நீ!
உன் பாசத்துடன்
போட்டியிடாத
என்னைப் போட்டியிட
வைத்த
ராஜதந்திரி நீ!
கேளடி இறைவனிடம்
ஒரே
ஒரு வரம்!
என் குருதியில்
கலந்து விட்ட
உன் பாசத்தைக்
காக்க
எனக்கு எந்த
சிறு காயமும்
வேண்டாமென்று ............
என்னைக் கவிதை எழுத வைத்த என் தோழி "ஃபாத்திமா "விற்கு
இந்த நண்பர்கள் தினத்தில் இந்தக் கவிதை காணிக்கை !!!!!!!!!!!
கல்?
பொய்யும் புரட்டும்
பேசும் புல்லர்களுக்கு
இங்கு
முதல் மரியாதை!
உண்மை பேசும்
மாந்தர்களுக்கு
இங்கு
அவமரியாதை!
இதை சிரித்து
ரசிக்கும் நீ என்ன
கல்லா?
கடவுளா?
கல்லென்றால்
சிரித்து
என்னைக் கொல்!
கடவுளென்றால்
விடை சொல்!...
மொழி!
அவள் விழிபேசும்
மொழிக்கு
மொழிபெயர்ப்பாளன் என் விழி
மட்டுமே !
கூட்டத்திலும்
பேசிக்கொள்ளும் எங்கள்
விழிகள்
தனிமையில் மட்டும்
ஏன்
மௌனிக்கிறது ...?
Friday, July 31, 2009
வழிகாட்டி!!!
அம்மா!
உண்ண உணவு
கொடுத்தாள்
உணவு உண்ண
கற்றுக்கொடுத்தாள்!
கைபிடித்து "அ" எழுதக்
கற்றுக்கொடுத்தாள்
கைபிடித்து பள்ளிக்கும்
அழைத்து சென்றாள்
அம்மா!
பருவத்தில் உலகை
அடையாளம் காட்டினாள்
என்
கல்லூரி வரை தோழியாய்
விலங்கினாள்
இத்தனை கொடுத்தவள்
நல்ல துணைவனை
கொடுக்க மாட்டாள்
என்ற
காதலை
மட்டும் எப்படி நான்
நம்பினேன் ???
காதல்???
காதல்
பணம் இருப்பவனுக்கும்
வருகிறது
பணம் இல்லாதவனுக்கும்
வருகிறது
படித்தவனுக்கும் வருகிறது
படிக்காதவனுக்கும் வருகிறது !
காதல்!
தன் கையால்
தன் இதயத்தை
தானே கிளித்துக்கொள்ளும்
குரூரன் !
காதல்!
காதலிப்பவர்களை தவிர
மற்றவர்களை நெருங்க விடா
சிறைச்சாலை!
காதல்!
இருவர் இணைய
பல இதயங்களை
கொலை செய்யும் கூற்றுவன் !
காதல்!
வெளித்தெரியும் நிஜத்தையும்
வெளித்தெரியாமல் மறைக்கும்
கண்ணின் புரை!
இதயங்கள் பார்த்து
இணைந்தது
இலக்கியக் காதல்!
சரீரம் பார்த்து வருவது
சமகாலக் காதல்!
கண்டதும் காதல்!
காணாமலும் காதல்!
பேச்சிலும் காதல்!
பேசாமலும் காதல்!
இண்டர்நெட்டில் காதல்!
SMS இல் காதல்!
இத்தனை இருந்தும்
இதயத்தில் இருக்கிறதா
காதல்????......
தேடல்!!!
அக்னியாய் கொதிக்கும்
வேளை
நீண்ட நெடிய
நெடுஞ்சாலை
ஒற்றை மிதிவண்டியில்
நான் மட்டும் !
முகத்தில் அடிக்கும்
புழுதி
நீரைத் தேடும்
உதடு
கொதிக்கும் பாலையில்
நான் மட்டும் !
ஓங்கி உயர்ந்த
தென்னை வரிசை
நடுவில் சலசலக்கும்
நீரோடை
சின்னஞ்சிறிய படகில்
நான் மட்டும் !
சில் வண்டுகள்
ரீங்காரமிட
ஊசியாய் என்னுள்
குளிர்
பச்சை புற்களின்
சலசலப்பு
பறவைகளின் மெட்டு
இத்தனைக்கும் நடுவில்
நான் மட்டும் !
விண்ணை முட்ட எத்தனிக்கும்
கட்டிடங்கள்
நெருங்கி வளர்ந்த
காங்கிரீட் காடு
இங்கும்
நான் மட்டும் !
தேடுகிறேன் மனிதனை !
எங்கு நோக்கியும்
கிடைக்கவில்லை !
தேடும் நான் மட்டும்
என்ன மனிதனா ?
விடை தெரியா கேள்வி
என்னுள் !
என்னுள் விழுந்த விதை
விருட்சமாகி இன்று
தேடலாய் இறைவனிடம் !
அவனிடமும் கிடைக்கவில்லை
விடை !
எங்கு கிடைப்பான்
மனிதன் ?
யாரிடம் கிடைக்கும்
விடை ?
இதயத்தின் தேடலுக்கு
நீயாவது
விடை சொல்வாயா
வானவில்லே ?
இறைவன்...
பாதம் படா இடத்தில்
மலர்களை
தேடினேன் இறைவா !
உனக்கு சரம் தொடுக்க !
தொடுத்தும் விட்டேன்
வந்தது குழப்பம்
மனதில் !
யாருக்கு அணிவிக்க ?
ராமனுக்கா ?
அல்லாவுக்கா ?
ஏசுவுக்கா ?
இதயம் தேடியது
இறைவனை !
பெயர்களை அல்ல !
எங்கிருக்கிறாய் நீ ?
ஒளியிலா ?
காற்றிலா ?
நீரிலா ?
மனிதரிலா ?
இல்லை நான் கட்டிய
சரத்திலா ?
எவ்வுருவில் இருந்தாலும்
வெளிப்படுத்து உன்னை !
இவ்வுலகின் குழப்பம்
தீர !
Thursday, July 30, 2009
கற்பனை...
இறுக்க மூடிய
விழிகளுக்குள் ஒரு
வெண்திரை !
எந்த ஊடகத்திலும்
கானா மனக்காட்சி !
வானவில்லாய் !
மழைத்துளியாய் !
எத்துனை
சந்தோஷ சாரல்கள் !
அடங்காத குதிரையாய் !
காட்டாற்று வெள்ளமாய் !
இந்த முரட்டுத்தனத்தை
அடக்க
இறைவனிடமும் இல்லையே
தடுப்பு !
நடைபயிலும்
சிறுகுழந்தை போல
தத்தி தாவி வரும்
இந்த நீரோடையில்
குளிக்காதவர் உண்டோ
இவ்வுலகில் !
அண்டசராசரத்தை ஆளும்
ஈசனே கூட
கற்பனை என்னும்
விஞ்ஞானமே !
ஏன் உன்னால் கூட
மாற்ற இயலவில்லை
இந்த கற்பனை காட்சியை
நிஜத்தின் சாட்சியாய் ...
தமிழ் அறிந்த மாந்தர்
எவரேனும் கூறுங்களேன்
இதற்கு மறுமொழி !
என் மேல் அவள்
கொண்ட நேசத்திற்கு
ஈடாக
என்னிடம் வார்த்தையும்
இல்லை !
அதனுடன் போட்டியும்
இல்லை !
ஆண் - பெண்
நட்பை கேலி செய்யும்
இவ்வுலகில் என் மேல்
அவள் கொண்ட
நேசம்
நட்பிற்கும் மேல் !
ஆனால்
காதல் அல்ல !
அவள் எனக்கு
தோழிக்கும் மேல் !
ஆனால்
காதலி அல்ல !
தோழனுக்கு மறுபால்
தோழி
மட்டும் தானா ?
இலக்கணம் மீறிய
எங்கள் தோழமைக்கு
தமிழ் கூறும் நல்லுலகமே
புது வார்த்தை
கூறு ....
வாழ்க்கை!!!
உன்னை
கடந்து விடும் தூரம்
என்று
நடை போட்டால் ?
கீழ்வானச் சிவப்புப் பந்தின்
தூரமாகத் தெரிகிறாயே!
உச்சி வெய்யிலின் உக்கிரத்தைப்
போல எரிக்கும்
உன் வெப்பத்தில்
உருகி
வெளிவந்து பிரகாசிக்க
நான் என்ன
தங்கமா ?
மனிதனய்யா !
கருணை கொள்
மனிதனிடம் ....
பாதை?
எங்கே செல்கிறோம் ?
வெட்டுக்கத்தியாலும்
வெடிகுண்டுகளாலும் உருவான
பிணங்களின் மீது நடந்து !
கௌதமன் அவதரித்த
பூமியாம் இது !
அன்று
" அவதரித்தவன் "
இன்று
" பிறந்திருந்தால் "
அவனும் பழகி இருப்பானோ ?
இந்த பாதையில்
நடை பயில......
மரணம்
இது இறைவன்
அளிக்கும் தண்டனையா ?
அல்லது விடுதலையா ?
மரணம் கானா
மக்களும்
மரணம் கானா
இல்லமும்
இல்லையே இவ்வுலகில் !
மரணத்தின் தொடர்ச்சி
இன்னொரு மரணமாகாது !
பிறக்கும் போதே
எழுதிவிட்டான் நாட்கணக்கை !
பல பெயர்களும்
சூட்டிவிட்டான் படைத்தவன்
இதற்க்கு !
கொலையாம் !
தற்கொலையாம் !
விபத்தாம் !
இயற்கை மரணமாம் !
இதில்
மரணித்தவனை நோவதில்
பயனில்லை !
ஏற்படுத்தியவனை நோவதிலும்
பயனில்லை !
கேளுங்கள் படைத்தவனிடமே !
இன்னும் எத்துனை
மணித்துளிகள்
உள்ளதடா எனக்கு
என்று !
விடியல்
விடிந்தும் விடியா
பொழுது !
கீழ்வானம் எங்கும்
வண்ணச்சிதறல்கள் !
எந்த ஓவியனின்
தூரிகை
செய்த மாயம் இது ?
வியந்தன என்
விழிகள்
இதன் அளவைக் கண்டு !
எத்துனை
ரவிவர்மாக்கள் பிக்காசோக்கள்
தேவையாடா
இதை வரைய ?
நொடிப் பொழுதில் வரையும்
உன்னை
என்னவென்று அழைக்க ?
இறைவன் என்றா ?
இயற்கை என்றா ?
இரவு முழுவதும் பேருந்தில் பயணம். விடிந்தும் விடியாத பொழுதில் பேருந்தின் சன்னலை விட்டு வெளியே நோக்கிய போது........
தாய் மண்
வானத்தில் எங்கும்
வேட்டு சத்தம் !
தீபாவளி அல்ல
தோழா!
பதுங்கு குழியில்
நித்தம்
எம் வாழ்வு !
உயிர் பயம் அல்ல !
நம்மை நம்பும்
உயிர்களுக்கான ஒரு
பாதுகாப்பு !
அரவணைப்பு தேடி
வந்தோம்
தாய் மண்ணை நோக்கி !
கரிய இருளில்
எம் உறவுகளுடனான
அந்த பயணம்
வேண்டாம்
எம் எதிரிக்கு கூட !
சுதந்திர காற்றை
சுவாசித்தவுடன் எம்
காதில் விழுந்த
முதற் சொல்
அகதி என்று !
வேண்டாம் சகோதரா !
எமக்கு அந்த
அவப்பெயர் !
தாய் மண்ணை
மீண்டும் அடைந்த
நான்
உம்மை வேண்டுகிறேன்
எம்மை " உன் சகோதரனாய் "
ஏற்க வேண்டி .....
மண்டபத்தில் இருக்கும் தாயகம் திரும்பியோர் முகாமில் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேர்ந்த போது, நமது மக்கள் அவர்களை "அகதி" என்று மிக சாதாரனமாக அழைத்த போது ஏற்படுத்திய வலி... இந்த கவிதை thinnai.com என்ற மின்னஞ்சல் இதழில் வெளிவந்திருக்கிறது.
தாய்மை
இவள்
தன் தொப்புள் கொடியின்
உறவை அறுத்ததால்
அவன் ஜனனம் !
இவள்
தன் பாசக்கொடியை
அறுத்தால்
அவன் சவம் !
உயிர் கொடுத்தவள்
உயிர் அறுக்கமாட்டாள்
என்று
கை காட்டுகிறான்
முதியோர் இல்லம்
நோக்கி ..........
முரண்பாடு!
எந்த விலங்கும்
இன்றி
சிறைப் பறவையாய் இருந்தேன்
இத்தனை நாட்களாய் !
நாளை
தாலி எனும்
விலங்கை கொண்டு
என்னை
ஆக்கப் போகிறாய்
சுதந்திர பறவையாய் !
என்ன முரண்பாடு ?
கவிஞன்???
கவிதை என்கிறாய்
நீ !
அடுத்த பிறப்பிலாவது
நான் கவிஞனாக
வரம் கேள்!