Wednesday, December 9, 2009

கற்பனை வறட்சி???

கார்முகில் மேற்கிலே
போரிட!
போர்க்களத்தில் நீ
சிந்திய உதிரத்துளிகளை
நன்னீராய் சேகரித்தது
போல...

சேகரித்த உன்
துளிகள்
பொங்கிப் பெருக்கெடுத்து
"வைகை"யாய்
எம் மண்ணின்
தாகம் தீர்க்க...
தாகம் தீர்ந்தவள்
த‌ந்த
மண‌ம் வீசும்
மல்லிகையை
சரமாய் தொடுத்தது
போல...

வார்த்தைகள் நூறாய்
அடுக்கடுக்காய் வ‌ந்து
குவிய‌...
சரமாய்த் தொடுத்தேன்
உன்னை!
கவிதை என்றார்கள்!


இன்று
போட்டிக்கு கவிதை
தேடினேன்!
வறட்சியானது
என் மனது!
நாளை ஆகப் போகும்
எம் மண்ணின்
நிலை போல...

"உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு"
நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

Tuesday, December 1, 2009

அழகி?



அழகுக்கு இலக்கணம்

வகுக்கின்ற உலகில்
இறைவனின்
மறு உருவமாய் பிறந்தவள்
நீ!

ம‌லையும் அழ‌கு!

அதில் வடிக்கும் சிலையும்
அழகு!
ம‌லை மீது ப‌ர‌வும்
மேக‌மும் அழ‌கு!
காடும் அழ‌கு!
காட்டில் திரியும்
மான்க‌ளும் அழ‌கு!
அருவியும் அழ‌கு!
அது
பாய்ந்தோடும் ந‌தியும்
அழ‌கு!


இப்ப‌டி

அழ‌கை வ‌ர்ணிக்கும்
உல‌கு
இறைவ‌னின் க‌ற்சிலையும்
நீயும்
ஒரே வண்ணம்
என்ற‌ போதிலும்
உன் அழ‌கை
ஏற்றுக்கொள்ளாத‌
கார‌ண‌ம்?