Wednesday, December 9, 2009

கற்பனை வறட்சி???

கார்முகில் மேற்கிலே
போரிட!
போர்க்களத்தில் நீ
சிந்திய உதிரத்துளிகளை
நன்னீராய் சேகரித்தது
போல...

சேகரித்த உன்
துளிகள்
பொங்கிப் பெருக்கெடுத்து
"வைகை"யாய்
எம் மண்ணின்
தாகம் தீர்க்க...
தாகம் தீர்ந்தவள்
த‌ந்த
மண‌ம் வீசும்
மல்லிகையை
சரமாய் தொடுத்தது
போல...

வார்த்தைகள் நூறாய்
அடுக்கடுக்காய் வ‌ந்து
குவிய‌...
சரமாய்த் தொடுத்தேன்
உன்னை!
கவிதை என்றார்கள்!


இன்று
போட்டிக்கு கவிதை
தேடினேன்!
வறட்சியானது
என் மனது!
நாளை ஆகப் போகும்
எம் மண்ணின்
நிலை போல...

"உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு"
நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

8 comments:

  1. //வார்த்தைகள் நூறாய்
    அடுக்கடுக்காய் வ‌ந்து
    குமிய...
    சரமாய்த் தொடுத்தேன்
    உன்னை!
    கவிதை என்றார்கள்! //

    இவ்வளவு அருமையாய் இருக்கு

    உங்களுக்கு எப்போதும் கற்பனை வறட்சியே ஏற்படாது தினேஷ்

    போட்டிக்கும் எழுதுங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வார்த்தைகள் நூறாய்
    அடுக்கடுக்காய் வ‌ந்து
    குவிய‌...


    எப்படி.... எங்கே..... எப்போது .....எவ்விடம்
    வந்து குவிந்த‌து என்ப‌தையும்
    தெளிவு படுத்துங்க‌ள் ந‌ண்ப‌ரே!

    ReplyDelete
  3. தாகம் தீர்ந்தவள் கொடுத்த மல்லிகை.நல்ல கற்பனை. கவிதையில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. போட்டியில் கலந்து கொள்கிறாயா? வாழ்த்துக்கள்.போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், கவிதை எழுதுவதை போட்டியின் முடிவு பாதிக்காமல் இருக்கப் பழகிக்கொள்.

    ReplyDelete
  4. இதை எனக்கான அறிவுரையாகவும் ஏற்றுக் கொள்கிறேன் வெற்றிவேல் ஸார்

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள் தினேஷ் நலமே பொலிக

    ReplyDelete
  6. நன்றாக இருக்கிறது வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வெற்றி பெற வாழ்த்துக்கள் தினேஷ்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete