Monday, August 3, 2009

மனைவி

பிறப்பது ஆணோ? பெண்ணோ?
தெரியவில்லை!
பெண் பிறந்தால்
உன‌க்கு
என் அறியா வயதில்!
பிறந்தது
இந்த ராஜகுமாரி அல்லவா!


ஐந்து வ‌ய‌தில்
போட்டேனே மூன்று முடிச்சு
என் இத‌ய‌த்தில்!
இருப‌த்திஎட்டில் போட்ட‌து
ச‌ம்பிர‌தாய‌த்தில்!
வாட் சண்டை தான்
போட‌வில்லை
உன்னுட‌ன் சிறுவ‌ய‌தில்!
ஆனால்
க‌ண் சண்டை புரிந்தேன‌டி
ப‌ருவ‌ வ‌ய‌தில்!

ஐந்து வ‌ய‌தில்

நான் க‌ண்ட‌ இந்த‌
நிலா
ப‌ருவ‌ப் பாதையில் என்னை
த‌வ‌றின்றி
அழைத்து வ‌ந்த‌
வெளிச்ச‌ சூரிய‌ன்!
உன் ந‌ட்பு வ‌ட்ட‌த்தை
நான்
க‌ப‌ளீக‌ர‌ம் செய்த‌போதும்
சிரித்து ர‌சித்த‌
தாய்
அல்ல‌வா நீ!

3 comments:

  1. //வாட் சண்டை தான்
    போட‌வில்லை
    உன்னுட‌ன் சிறுவ‌ய‌தில்!
    ஆனால்
    க‌ண் சண்டை புரிந்தேன‌டி
    ப‌ருவ‌ வ‌ய‌தில்!//

    eppadi dhinesh ivvalavu arputhamai irukku

    anubavama!!

    ReplyDelete
  2. 5 vayasulayae ipdiyaaaaaaaa

    ReplyDelete