Tuesday, December 1, 2009

அழகி?



அழகுக்கு இலக்கணம்

வகுக்கின்ற உலகில்
இறைவனின்
மறு உருவமாய் பிறந்தவள்
நீ!

ம‌லையும் அழ‌கு!

அதில் வடிக்கும் சிலையும்
அழகு!
ம‌லை மீது ப‌ர‌வும்
மேக‌மும் அழ‌கு!
காடும் அழ‌கு!
காட்டில் திரியும்
மான்க‌ளும் அழ‌கு!
அருவியும் அழ‌கு!
அது
பாய்ந்தோடும் ந‌தியும்
அழ‌கு!


இப்ப‌டி

அழ‌கை வ‌ர்ணிக்கும்
உல‌கு
இறைவ‌னின் க‌ற்சிலையும்
நீயும்
ஒரே வண்ணம்
என்ற‌ போதிலும்
உன் அழ‌கை
ஏற்றுக்கொள்ளாத‌
கார‌ண‌ம்?

4 comments:

  1. உங்கள் நோக்கில் பார்க்கும்போது எனக்கும் எல்லாமே அழகாகத்தெரிகிறதே நண்பரே ....

    கவிதை அழகு ....
    அதில் உள்ள பெண்ணும்....

    ReplyDelete
  2. இறைவ‌னின் க‌ற்சிலையும்
    நீயும்
    ஒரே வண்ணம்
    என்ற‌ போதிலும்
    உன் அழ‌கை
    ஏற்றுக்கொள்ளாத‌
    கார‌ண‌ம்?


    அதனே....
    நான் என்ன அம்புட்டு கறுப்பவா இருக்கேன்??

    ReplyDelete
  3. nice poem...alagi is always a mystery

    ReplyDelete