Saturday, August 8, 2009

நான் யார்?

யாருமற்ற பால்வீதியில்
நான்.....
ஞாயிறா?
திங்களா?


திங்களென்றால்
தாய்க்கு உணவூட்டவும்
காதலுக்கு துணையாகவும்
கவிஞனின் கற்பனைக்கு
வித்தாகவும்!

இல்லை!
நான் சூரியன்!


சுட்டெரிக்கும் வெப்ப‌மும்
என்னால்!!
நில‌வின் குளிர்ச்சியும்
என்னால்!
என் வெப்ப‌மூச்சை
அறிந்த‌ நீ
ம‌ற‌ந்து விட்டாயே!
நில‌வின் குளிர்ச்சியும்
என்னால் என்ப‌தை?
பிம்ப‌த்தை எழுதும்
க‌விஞ‌னின்
எழுதுகோலுக்கு மூல‌த்தை
தொட‌ ம‌ன‌மில்லையே......?


No comments:

Post a Comment