Wednesday, October 7, 2009

பார்வை

எங்களுக்கு தோன்றும்
கனவிலும்
பல வண்ணங்கள்!
அவனுக்கோ
பகலிலும்
ஒரே வண்ணம் தான்!
கனவு காணுங்கள்
என்றால்!
அவன் எப்படி?...
நட்பின் முரண்பாடு


தோழா!
நட்பென்ற நீர்
ஊற்றி
அதிகரிக்கின்றாய் தாகத்தை!

என் மரணமே
இதற்கு மருந்தென்றாலும்
நிரந்தரமாக்கிவிடு
எனக்கு
நட்பின் தாகத்தை...
கழற்றிவிட்டேன்
என்
முரட்டு முகமூடியை
உன்னிடம் மட்டும்!
ஆம்!
உன்னிடம் மட்டும்
சிறு குழந்தையாய்!!!!